Home
Our Services
Contact us
Login
CRM Login
Home
Our Services
Contact us
Login
CRM Login
Our Best Services
Home
Services
இ சேவை / Tn eSevai
வருமான சான்றிதழ் / INCOME CERTIFICATE
விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் : • புகைப்படம் • ஆதார் அட்டை • குடும்ப அட்டை • பெற்றோர் அரசு வேளையில் இருந்தால் PAY SLIP வருமானச் சான்றிதழ் என்பது ஒரு தனிநபர் அல்லது குடும்பத்தின் வருமானத்தை சான்றுபடுத்துகின்ற ஒரு ஆவணமாகும். இதில், தினசரி வருவாய், சம்பளம், ஓய்வூதியம், வாடகை, சொத்து வருமானம், வெளிநாட்டு பணம் உள்ளிட்ட அனைத்து மூலங்களிலிருந்தும் ஆண்டு வருமானம் போன்ற விவரங்கள் அடங்கும். வருமானச் சான்றிதழின் பயன்கள்: பள்ளி, கல்லூரி சேர்க்கை பணியில் இருப்போருக்கு அரசுத் திட்டங்களின் பயனர்களுக்கு போட்டித் தேர்வு விண்ணப்பங்களுக்கு வங்கி கடனுக்காக பிற அரசுத் தேவைகளுக்கு
Required Documents
01
இருப்பிட சான்றிதழ் / RESIDENCE CERTIFICATE
தேவையான ஆவணங்கள்: ஆதார் அட்டை குடும்ப அட்டை புகைப்படம் Birth Certificate ( Optional )
Required Documents
02
சாதி சான்றிதழ் / COMMUNITY CERTIFICATE
தேவையான ஆவணங்கள்: ஆதார் அட்டை குடும்ப அட்டை புகைப்படம் பெற்றோர் சாதி சான்றிதழ் (அல்லது) TC சாதி சான்றிதலின் பயன்கள்: அரசுப் பணிகளில் இடஒதுக்கீடு பெறுவதற்கு, கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு பெறுவதற்கு, சமூக நலத் திட்டங்களின் பலன்களில் பங்கு பெறுவதற்கு.
Required Documents
03
முதல் பட்டதாரி சான்றிதழ் / FIRST GRADUATE CERTIFIC
தேவையான ஆவணங்கள்: ஆதார் அட்டை குடும்ப அட்டை புகைப்படம் மாற்றுச் சான்றிதழ் ( Transfer Certificate ) Or மதிப்பெண் சான்றிதழ் ( Mark Sheet ) & கல்லூரி படிப்பு சேர்கை சான்றிதழ். பெற்றோர் ( தாய் / தந்தை ) மாற்றுச் சான்றிதழ் ( Transfer Certificate) Or படிக்கவில்லை என்றால் கையெழுத்து. உடன் பிறந்தவர்களின் மாற்றுச் சான்றிதழ் (Transfer Certificate) Or மதிப்பெண் சான்றிதழ் (Mark Sheet ) Or படித்து கொண்டிருத்தால் படிப்பு சான்றிதழ் (College Bonafide Certificate) . பத்திரம் ( Affidavit ) - Contact to Centre முதல் பட்டதாரி சான்றிதழ் என்றால் என்ன? * ஒரு குடும்பத்தில் இருந்து முதன்முதலாக உயர்கல்விக்குச் செல்லும் மாணவர்களுக்கு வழங்கப்படும் ஒரு சான்றிதழ். * இந்த சான்றிதழ் மூலம், மாணவர்கள் கல்வி கட்டண சலுகை, உதவித்தொகை போன்ற பல அரசு திட்டங்களின் மூலம் பயனடையலாம். * பொருளாதார ரீதியாக பின்தங்கிய பின்னணியில் உள்ள மாணவர்களுக்கு உயர் கல்வியை அணுக உதவுவதே இதன் நோக்கம்.
Required Documents
04
விதவை சான்றிதழ் / WIDOW CERTIFICATE
தேவையான ஆவணங்கள்: புகைப்படம் ஆதார் அட்டை குடும்ப அட்டை கணவர் இறப்புச் சான்றிதழ் விதவைச் சான்றிதழானது, தங்கள் கணவர் மரணமடைந்து மீண்டும் திருமணம் செய்து கொள்ளாதவர்களுக்கானது, அரசாங்கத்தால் வழங்கப்படும் சலுகைகள் மற்றும் திட்டங்களைப் பெறுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது.
Required Documents
05
OBC சான்றிதழ் / OTHER BACKWARD CLASS CERTIFICATE
தேவையான ஆவணங்கள்: ஆதார் அட்டை குடும்ப அட்டை புகைப்படம் சாதிச் சான்றிதழ் வருமான சான்றிதழ் OBC சான்றிதழ் :- 1) மாநில அரசில் சாதி சான்றிதழ் பிறப்பின் அடிப்படையில் வழங்கப்படுகின்றது 2) மத்திய அரசில் OBC சான்றிதழ் பிறப்பு மற்றும் " பொருளாதார " நிலை அடிப்படையில் வழங்கப்படுகின்றது . 3) பெரும்பாலான நமது BC/MBC/DNC பிரிவுகள் OBC list இல் உள்ளன.. வெகு சில BC சாதிகள் OBC பட்டியலில் இல்லை. 4) OBC Creamy Layer ( வளமான பிரிவினர்) OBC Non Creamy Layer ( வளமான பிரிவில் அல்லாதோர்).. இரண்டு வகைகள் உள்ளன 5) OBC Non creamy layer தான் பயன் தரக் கூடியது.. ( OBC Creamy Layer certificate - General category போல தான்) 6) OBC ( NCL ) பெற பொருளாதார நிலை கருத்தில் கொள்ளப்படுகிறது .. பெற்றோர் ஆண்டு வருமானம் 8 lakhs மிகாமல் இருக்க வேண்டும்.. இந்த பதிவின் நோக்கம் இது தான்... இதை தெளிவு படுத்த தான் இந்த நீண்ட நெடிய பதிவு ? 7) அந்த 8 இலட்சம் என்பது நமது ஊதியம் மற்றும் விவசாய வருமானம் ( இருப்பின்) நீங்கலாக பெறக்கூடிய " இதர வருமானம் " .. மட்டுமே கருத்தில் கொள்ள வேண்டும்... 8) நமது மாத ஊதியத்தை கணக்கில் கொள்ள தேவையில்லை... பெற்றோர் ஆண்டு வருமானம் (ஊதியம்) 8 L க்கு மேல் இருந்தாலும் OBC Non creamy layer certificate வாங்கலாம். இது "நிரந்தர சான்றிதழ்" கிடையாது... சான்றிதழ் பெறப்பட்ட நிதியாண்டில் மட்டுமே செல்லத்தக்கது.. 1/4 முதல் 31/3 வரை... ( உ.ம் இப்போது பெறப்படும் சான்றிதழ் validity 31/3/2025 வரை மட்டுமே) 1/4/25 க்கு பிறகு பெறப்பட்டது எனில் அது 31/3/26 வரை செல்லத்தக்கது) .. அதே போல அந்த நிதியாண்டில் தங்களின் " இதர வருமானம்" 8L க்கு மிகும் போது (பொதுவாக இருக்காது) சான்றிதழ் தானாக ரத்து ஆகிறது.. 9) மேலும் சில நிபந்தனைகளை உள்ளன... அவைகளில் சில... a) பெற்றோரில் ஒருவர் நேரடி Group A officer எனில் கிடையாது b) பெற்றோர் இருவரும் நேரடி Group B நியமனம் எனில் கிடையாது.. நமக்கு... (ஆசிரியர்கள் - BT/PG/HM (HS), HM (HSS) எல்லாம் Group B service தான்). அம்மா அப்பா இருவரும் Direct PG/BT எனில் கிடைக்காது.. ஒருவர் Direct PG/BT மற்றொருவர் அரசு பணியில் இல்லை அல்லது Group C & D நியமனம்.. ஆனால் பதவி உயர்வு மூலம் தற்போது group B எனில். OBC (NCL) உண்டு.. c) தற்போது தந்தை தாய் இருவரும் BT/PG/HM என்ற காரணத்தால் நிராகரிக்க கூடாது.. ஒருவேளை அவர்களில் ஒருவர் SGT நியமனம் பதவி உயர்வு மூலம் BT/PG/HM எனில் OBC NCL தகுதி உண்டு... 10) மத்திய அரசிற்கு தான் OBC certificate என்றாலும் அதை வழங்குவது நமது மாநில VAO/RI/ DT/ Tahsildar.. எனவே தங்களின்/அவர்களின் புரிதலுக்காக கிடைக்கப் பெற்ற தகவல் அரசாணையினை தொகுக்கப்பட்டுள்ளது.. நமது பள்ளி குழந்தைகள் மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் சேர OBC NCL தேவைப்படலாம் அதே போல் ஆசிரியர் அரசு ஊழியர்கள் குழந்தைகள் கல்வி/வேலைவாய்ப்பு பெற OBC NCL certificate தேவைப்படலாம்...
Required Documents
06
பிறப்பிட சான்றிதழ் / NATIVITY CERTIFICATE
தேவையான ஆவணங்கள்: ஆதார் அட்டை குடும்ப அட்டை புகைப்படம்
Required Documents
07
வாரிசு சான்றிதழ் / LEGAL HEIR CERTIFICATE
தேவையான ஆவணங்கள்: விண்ணப்பதாரரின் ஆதார் அட்டை விண்ணப்பதாரரின் குடும்ப அட்டை விண்ணப்பதாரரின் புகைப்படம் வாரிசுகளின் ஆதார் இறந்தவரின் தாய் மற்றும் தந்தை விபரம் இறந்தவரின் இறப்பு சான்று *வாரிசுதாரர்கள் எவரும் இறந்திருக்கும் பட்சத்தில் இறப்பின் போது அவரது வயதை குறிப்பிடவும் *இறந்தவரின் தாய் தந்தையின் விவரத்தை கட்டாயம் பதிவிட வேண்டும்
Required Documents
08
திருமணம் ஆகாதவர் சான்றிதழ் / UNMARRIED CERTIFICATE
தேவையான ஆவணங்கள்: ஆதார் அட்டை குடும்ப அட்டை புகைப்படம் திருமண அழைப்பிதழ் கல்வித் தகுதி சான்று / TC
Required Documents
09
சிறு மற்றும் குறு விவசாயி சான்றிதழ் / Small and Ma
சிறு/குறு விவசாயி சான்றிதழ் பெற 5-ஏக்கர் -க்கும் குறைவாக விவசாய நிலம் இருக்க வேண்டும். *பட்டா கட்டாயம் விண்ணப்பதாரர் பெயரில் இருக்க வேண்டும். தேவையான ஆவணங்கள் : ஆதார் அட்டை குடும்ப அட்டை நில சிட்டா புகைப்படம்
Required Documents
10
ஆண் குழந்தை இல்லா சான்றிதழ் / NO MALE CHILD CERTI
தேவையான ஆவணங்கள்: ஆதார் அட்டை குடும்ப அட்டை குடும்ப புகைப்படம் குழந்தைகளின் ஆதார் மற்றும் பிறப்பு சான்றிதழ் கருத்தடை சான்று
Required Documents
11
OAP APPLY - INDIRA GANDHI NATIONAL OLD AGE PENSION
OAP என்றால் முதியோர் ஓய்வூதியத் திட்டம். இது, ஆதரவற்ற மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள முதியோர்களுக்கு நிதி உதவி வழங்கும் ஒரு திட்டமாகும். இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம் (IGNOAPS) மற்றும் தமிழ்நாடு அரசு முதியோர் உதவித்தொகை திட்டம் போன்றவை இந்த வகையில் அடங்கும் நன்மைகள் ஓய்வூதியம்: மாதம் ₹1,000/-. பொங்கல் மற்றும் தீபாவளிக்கு இலவச ஆடைகள்: ஆண் ஓய்வூதியதாரருக்கு ஒரு வேட்டி இலவசம். ஓய்வூதியம் பெறும் ஒரு பெண்ணுக்கு ஒரு இலவச சேலை. அங்கன்வாடி மையங்களில் இலவச அரிசி: சத்தான உணவு உட்கொள்பவர்களுக்கு மாதம் 2 கிலோ. சத்தான உணவு சாப்பிடாதவர்களுக்கு மாதம் 4 கிலோ. தகுதி விண்ணப்பதாரர் ஆதரவற்றவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் வயது 60 வயது மற்றும் அதற்கு மேல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் "வறுமைக் கோட்டுக்குக் கீழே" பிரிவைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
Required Documents
12
Need Help? Get in touch with us.
வீட்டிலிருந்தபடியே உங்கள் தேவைகளை எளிதாகப் பெற்றுக்கொள்ளுங்கள். உங்கள் தேவை – எங்கள் சேவை.
Connect Call
Chat WhatsApp